உள்நாட்டு செய்திகள்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றிற்கு செல்லலாம்.. – பைசர்.



உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் மீள் பரிசீலனைக்காக கோரிக்கை முன்வைக்க சகல உரிமையும் உள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் உரிய தொகுதிகளில் தேர்தல் பிற்போகவும் வாய்ப்புகள் உள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.

கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எனினும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஏகமனதான ஒத்துழைப்பு உள்ளதனால் தேர்தலில் எந்த சிக்கலும் வராது எனவும் அவர் குறிப்பிட்டார்.

#reeshmaa..

Related posts

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது…

wpengine

10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

wpengine

ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் தேங்காய்களுடன் நாளை மீட்டியாகொட’யில்

wpengine