விளையாட்டு

வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக மீளவும் சமிந்த



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியில் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸை மீண்டும் நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சமிந்த வாஸுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாளை எடுக்கவுள்ளதாகவும், அதன் பின்னரே வாஸின் ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாவதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, வேகப்பந்து பந்து பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் தனது பதவியிலிருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை ரசிகர்களின் ஆதரவுடன் சுதந்திர கிண்ணத்தினை இந்தியா அணி கைப்பற்றியது…

wpengine

சிடேனுக்கு கொரோனா

wpengine

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் டி.ஸ் சேனானாயக் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் பரிசளிப்பு

wpengine