உள்நாட்டு செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் ஐ.நாவில் இன்று உரை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (26) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.

இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளில் இருந்து விலகுவது குறித்து வெளிவிவகார அமைச்சர் தமது உரையின் ஊடாக அறிவிக்கவுள்ளார்.

அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆற்றவுள்ள உரைக்கும் வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்களின் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் – வாட் பிளேஸ் வீதிக்கு பூட்டு…..

wpengine

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

wpengine

அங்கொட லொக்கா மற்றும் லடியா ஆகியோரை இலங்கைக்கு கொண்டுவர காவற்றுறை நடவடிக்கை..

wpengine