உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு நாணயம் கடத்தும் முயற்சி முறியடிப்பு



வெளிநாட்டு நாணயங்களை தனது பயணப் பொதியில் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் (வயது 29) குருணாகலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவரிடமிருந்து 35 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர் வியாபார நடவடிக்கைக்காக அடிக்கடி சிங்கப்பூருக்கு சென்று வருபவர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இருப்பினும், இவர் சட்ட விரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் குழுவின் உறுப்பினராக இருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி தலைமையில்..

wpengine

ஜனாதிபதியின் உடம்பில் ஓடுவது பச்சை இரத்தம் – கம்மன்பில

wpengine

மாலிங்கவிற்கு தொடரும் போட்டித்தடைகள் – IPL இனைத் தொடர்ந்து மற்றுமோர் போட்டிக்கு தடை

wpengine