உள்நாட்டு செய்திகள்

வெளிநாடு செல்ல நிசாங்க சேனாதிபதி நீதிமன்றில் கோரிக்கை..


எவன்கார்ட் தலைவர் நிசாங்க சேனாதிபதி வைத்திய சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறயினும் நிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்வது தொடர்பில்,  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு அவசியம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த அனுமதி கோரிக்கையினை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத ஆயுதக்கொள்வனவு மற்றும் அரசாங்கத்திற்கு 11.3 பில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் இவரிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது சுகாதார அதிகாரியின் அனுமதி கட்டாயம்

wpengine

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு

Azeem Kilabdeen

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா

wpengine