உள்நாட்டு செய்திகள்வணிகம்

வெல்லம்பிட்டிய மக்களின் சுகாதார நலனினை கருத்திற் கொண்டு சிலாபம் சித்தாரா வைத்தியசாலையின் மற்றுமொரு சேவை



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டிய மக்களின் சுகாதார நலனினை கருத்திற் கொண்டு சித்த ஆயுர் வேதத்தின் மற்றுமொரு சேவை மனப்பாங்குடன் சிலாபம் சித்தாரா வைத்தியசாலை மற்றும் உலக இஸ்லாமிய வானொலியான செரெண்டிப் அலைவரிசையின் ஊடக அனுசரணையுடன் வெல்லம்பிட்டிய – கொய்லவத்த அல்- இப்ராஹீமியா ஜும்மா பள்ளிவாயல் இணைந்து நடாத்தும் ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் இன்று (09) காலை முதல் ஒரு நாள் சேவையாக இடம்பெறுகின்றது.

வைத்திய துறையில் பல சேவைகளை முன்னெடுத்து வருகின்ற குறித்த சிலாபம் சித்தாரா வைத்தியசாலையின் குறித்த பணியானது பொது மக்கள் மத்தியில் இன மத பேதமின்றி கருசணையுடன் மக்களின் சுகாதார நலன் குறித்து சமூக நோக்கோடு நடாத்தப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இங்கிலாந்து அணி 05 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கள்…

wpengine

அமைச்சர்களை சந்திக்கும் ‘பொதுமக்கள் தினம்’ நாளை இடம்பெறாது –

wpengine

கொழும்பில் தேர்தலுக்காக கட்டுப்பணத்தை செலுத்திய பொதுஜன முன்னணி..!

wpengine