உள்நாட்டு செய்திகள்

வெலிமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அரச அனுசரணையில் இறுதி சடங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான, அக்கமஹா பண்டிதர் கலாநிதி அதி . வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி சடங்கை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களைத் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, தேரரின் இறுதி சடங்கை பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடாத்துவதற்கு விரைவில் தடையுத்தரவு..

wpengine

600க்கும் மேற்பட்ட அன்னதான சாலைகள் பதிவு

wpengine

ஹற்றனில் சமையல் எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்னால் மாயமாகிப் போன சிலிண்டர்கள்

News Editor