உள்நாட்டு செய்திகள்

வெலிக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிரதான சாட்சியாளரின் வீட்டுக்கு துப்பாக்கிச்சூடு..



கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற வெலிக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பத்தை நேரில் கண்ட பிரதான சாட்சியாளரான சுதேஷ் நந்திமாலின் வீட்டில், துப்பாக்கிதாரர்கள், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவை பகுதியில், நேற்று(04) இரவு 11 மணியளவில் குறித்த இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக, பொலிஸ் அவரச இலக்கச் சேவையான 119க்கு அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாக, எந்தவொரு உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை என்றும் எனினும், குறித்த வீடு மற்றும் வாயில் கதவு போன்றவற்றில், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டில், நந்திமாலும் அவருடைய சகோதரியும் வாழ்ந்து வருவதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(rizmira)

Related posts

சவூதி அரேபியாவின் இளவரசர் நாளை இலங்கை வருகை

wpengine

மழை வெள்ளம் காரணமாக மிதக்கின்றது கல்முனை அல் – பஹ்ரியா பாடசாலை..!

wpengine

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசு அனுதி..

wpengine