உள்நாட்டு செய்திகள்

வெலிக்கடை கொலை சம்பவம் தொடர்பான பிரதான சாட்சியாளரின் மனு நிராகரிப்பு…



2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி, பிரதான சாட்சியாளரான சுதேஸ் நந்திமால் தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனு இன்று(05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த மனுவை தொடர்ந்தும் விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பிரதி மன்றாடியார் நாயகம் மாதவ தென்னகோண் விளக்கமளித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

PCR ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

wpengine

வயதெல்லையை தீர்மானிக்கும் கலந்துரையாடல் இன்று

wpengine

வர்தா புயலினைத் தொடர்ந்து உருவாகப் போகும் மாருதா புயல்..

wpengine