உள்நாட்டு செய்திகள்

வெலிகமயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு…



வெலிகம பிரதேசத்தில் நேற்று(01) மாலை டிபர் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வெலிகம, வலான வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெலிகம, கொஹுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து தொடர்பாக டிபர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில்…

wpengine

பொருளாதார மையங்களை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் – இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு…!

wpengine

சிறுத்தை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமனம்…

wpengine