ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வெற்றியில் மறைந்திருந்த இரகசியம் குறித்து ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் கருத்து..


சிறந்த ஆரம்பம் மற்றும் களத்தடுப்பு ஆகியவையே போட்டியின் வெற்றிக்கு காரணம் என, இலங்கை அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் எப்கன் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“நாம் விசேடமாக கதைத்ததொன்று தான் சிறந்த ஆரம்பம் பற்றியதாகும்… வரவேற்புகள் எமது அணியின் களத்தடுப்பில் இருந்த வீரர்களுக்கே சாரும், அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்..வெற்றி பெற வேண்டும் என்றால், சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். எமது சுழற் பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் அவர்களது கடமைகளை திறமையாக நிறைவேற்றி இருந்தனர்.. எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்…”

Related posts

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் யார் தெரியுமா… இன்ன இவர் தான்..

wpengine

இனிவரும் O/L பரீட்சைக்கு 06 பாடங்கள்…?

wpengine

அருந்திக்க பெர்ணான்டோ எதிர்க்கட்சியில்..

wpengine