உள்நாட்டு செய்திகள்

வெசாக் தின வாரத்தினை முன்னிட்டு மது வரி திணைக்களத்தினால் விசேட கண்காணிப்பு…



வெசாக் பண்டிகை காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ளடக்கிய வகையில் மது தொடர்பான குற்ற செயல் மற்றும் கலால் திணைக்களத்தினால் அனுமதி பெற்ற நிலையங்களினால் இடம் பெறும் முறைக்கேடுகளை தவிர்ப்பதற்கு விசேட கண்காணிப்பு சேவையை இலங்கை மது வரி திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

மது வரி ஆணையாளர் நாயகம் ஆர்.சேமசிங்க ஆலோசனைக்கு அமைவாக எதிர்வரும் ஏப்ரல் 27 – மே 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கண்காணிப்பு மது வரி திணைக்களத்தின் தலைமையகத்தில் 24 மணித்தியாலமும் செயற்படும் விசேட பொறிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எத்தகைய இடத்திலும் இடம் பெறும் மது குற்ற செயல் மற்றும் மது வரி அனுமதி பத்திரம் பெற்ற இடங்களுக்கு அருகாமையில் இடம் பெறும் நிகழ்விற்கு அமைவாக கீழ் கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு மது வரி திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகவும் பெற்றுக் கொள்ளமுடியும்.

தொலைபேசி இலக்கங்கள் : 0112-045077 , 0113-888 832, 0772-602842

பெக்ஸ் : 0112-877882, 0112-877895

மின்னஞ்சல் முகவரி : oiccrime@excise.gov.lk , dcehr@excise.gov.lk

Related posts

பல்கலைக்கழக அனுமதி – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு…

wpengine

ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்து – 06 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு (update)

wpengine

பயணிகள் போக்குவரத்து சேவையின் பிரச்சினைகள் குறித்து இன்று முதல் ஆய்வு…

wpengine