உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வீரவன்ஸவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக குற்றவியல் மற்றும் குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தை மீறி போலி கடவுச்சீட்டை தன்வசம் வைத்திருந்தமை, அந்த போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த இந்த வழக்கு தொடரப்பட உள்ளது.

இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அடுத்த சில தினங்களில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

மொரகஹகந்த களுகங்கை அணைக்கட்டு ஜனவரியில் திறப்பு…

wpengine

அரசு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

wpengine

ஜனாதிபதி செயலாளராக உதய ஆர்.செனவிரத்ன நியமனம்…

wpengine