ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வீரவங்ச என்ற பாத்திரத்தின் வாழ்க்கை ஒரு நடிப்பு: இராஜாங்க அமைச்சர்


அரசியலமைப்புச் சட்டவாக்க சபையில் இருந்து உண்மையில் விலக வேண்டும் என்ற தேவை இருந்தால், விமல் வீரவங்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையாக அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் சபாநாயகரிடம் கடிதங்களை கையளித்து விட்டு விலகும் உரிமை எவருக்கும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாதனமுத்தாவும் அவரது சகாக்களும் என்ற கதை விமல் வீரவங்ச உட்பட 5 குழுவுடன் சம்பந்தப்படுத்தலாம் எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளர்.

புத்தளம் கொட்டுக்கச்சி பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளர்.

விமல் வீரவங்ச என்ற பாத்திரத்தின் வாழ்க்கை ஒரு நடிப்பு. அவரது புதிய நாடகம் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையில் இருந்து விலகும் கதை.

சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் இருந்து அரசியலமைப்பு மற்றம் பற்றி பேசப்பட்டு வருகிறது. தற்போது இணக்கப்பாட்டுடன் அந்த மாற்றத்தை செய்ய அரசாங்கம் தெளிவான வேலைத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.

மேலும், வேலைத்திட்டத்தை தெளிவாக செயற்படுத்தும் சந்தர்ப்பத்தில் வீரவங்ச இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு..?

wpengine

அப்பல்லோ விரைந்த நடிகர் பவர் ஸ்டார்: அங்க யாரை பார்த்தார் தெரியுமா?

wpengine

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

wpengine