உள்நாட்டு செய்திகள்

வீடுகளை இழந்த எம்.பிக்களுக்கு தற்காலிக வீடுகள்- ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

வன்முறை காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து வாழும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலவத்துகொட வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடுகளை தற்காலிகமாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மைய நாட்களில் 55 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் வன்முறையாளர்களால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மேலதிகமாக 06 மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்

Related posts

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆரம்பம்

News Editor

வெலிக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிரதான சாட்சியாளரின் வீட்டுக்கு துப்பாக்கிச்சூடு..

wpengine

மின்சாரம் தடையின்றி வழங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்..!

wpengine