Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வீசா தடை செய்யப்பட்ட பிரித்தானிய யுவதிக்காககுரல் கொடுக்கும் மைத்திரி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய பெண் கெய்லி பிரேசரின் விசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ் விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியும் இளைஞர் முன்னணியும் அவரது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முன்வந்துள்ளன.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுடன் (Maithripala Sirisena) பிரித்தானிய யுவதிக்கும் பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதற்கமைய, நாடாளுமன்றத்திலும், அரசியல் மற்றும் சமூக இயக்கங்களிலும் அவரது உரிமைகளுக்காக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் டாக்டர் அனுருத்த தெரிவு

wpengine

முன்னாள் கடற்படை தளபதிக்கு கலாநிதிப்பட்டம்

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மிதமான காலநிலை

wpengine