உள்நாட்டு செய்திகள்

விஷேட சுற்றிவளைப்பில் 816 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் மோசடி தொடர்பில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) காலை 8 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களுள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 17 பேரும், நீதிமன்றத்தை நிராகரித்த 49 பேரும், போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 665 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது…

wpengine

டக்ளஸ் மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்

wpengine

இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் அதிகரிப்பு..

wpengine