உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

விளையாட்டு பணிப்பாளரின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்…



தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கை வீரர்களுக்கு முறையான தங்குமிட வசதி பெற்று கொடுக்காமை காரணமாக விளையாட்டு பணிப்பாளரின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இம்முறை போட்டிகளுக்காக கலந்து கொள்ளவுள்ள இலங்கை வீரர்கள் தங்கியுள்ள விடுதியில் நீர் மற்றும் மின்சாரம் இன்றி நேற்று(04) அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடர் இன்று(05) சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபால், பூட்டான் மற்றும் மாலைத் தீவு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 200 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

விமானப்படை அதிகாரிகள் இருவர் கைது

wpengine

ருவான் குணசேகரவுக்கு மீளவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி..?

wpengine

ஆசிரியர்கள் அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

wpengine