உள்நாட்டு செய்திகள்

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் சர்வதேச கிரிக்கட் பேரவை தலைவருக்கு இடையே சந்திப்பு…



விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் ஷசாங் மனோகரை இன்று(06) துபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் போது மைதானத்தை மாற்றியமைப்பதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக இலங்கையின் கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் குறித்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகப்பணிகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்

wpengine

சபாநாயகர் கருவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

wpengine

மஹிந்த தேசப்பிரிய மற்றும் கட்சிகளது செயலாளர்களிடையே விசேட கலந்துரையாடல்…

wpengine