கேளிக்கை

விளம்பரத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா? – நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய ப்ரியா…



“ஒரு அடார் லவ்” என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற கண்சிமிட்டும் காட்சி மூலம் பிரபலமான ப்ரியா வாரியரை விளம்பர படம் ஒன்றில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கண்சிமிட்டும் காட்சி மூலம் பிரபலமான ப்ரியா வாரியர் இந்திய அளவில் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் முன்னணி நாயகிகளையும் பின்னுக்கு தள்ளினார்.

இந்த நிலையில் பிரியா வாரியருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வருகிறது. ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இப்போது மற்றொரு பெரிய கம்பெனி ஒன்று அவரை அணுகி உள்ளது. இதில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள முன்னணி நடிகைகள் இன்னும் ரூ.1 கோடி சம்பளத்தையே எட்டாத நிலையில், விளம்பரம் ஒன்றில் நடிக்க ப்ரியா வாரியருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக வெளியான தகவல் மலையாள நடிகைகளுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

Related posts

திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன்… (PHOTOS)

wpengine

ஸ்ரீ ரெட்டி’யின் அவதாரமாக பேயல் ராஜ்புட் திரைக்கு…

wpengine

கருணாநிதியாக நான் நடிக்க வேண்டும்!

wpengine