உள்நாட்டு செய்திகள்

விலங்கு வேட்டையாடியதால் முன்னாள் ஐ.தே.க பிரதேச சபை உறுப்பினர் கைது



மதுனாகல வனத்தில் விலங்கு வேட்டைக்குச் சென்ற அம்பலாந்தொட்ட பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) அதிகாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

கைது செய்யப்பட்ட சமயத்தில் சந்தேக நபரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் வேட்டையாடப்பட்ட விலங்கின் உடல் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றதாகவும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Related posts

ஐ.தே.கட்சியினால் கோரிக்கை கடிதம்

wpengine

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

wpengine

க.பொ.த.சா.தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை 15ம் திகதியுடன் நிறைவுக்கு..

wpengine