உலக செய்திகள்

வியட்நாமை தாக்கிய டோக்சுரி புயல் ..



வியட்நாம் நாட்டின் மத்திய பகுதியை மணிக்கு 130 கிலோமீட்டர வேகத்தில் இன்று(15) டோக்சுரி புயல் தாக்கியுள்ளது.
இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹா டின்ஹ் மற்றும் குவாங் பின்ஹ் மாகாணங்களை பதம்பார்த்துள்ளதுடன் புயலுடன் பெய்த பலத்த மழை காரணமாக ஹா டின்ஹ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முன்னதாகவே விடுக்கப்பட்ட புயல் தொடர்பான எச்சரிக்கையை தொடர்ந்த சுமார் 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டின் வடபகுதியில் உள்ள தலைநகரான ஹனாய் பகுதியை நாட்டின் தென்பகுதியில் உள்ள ஹோச்சி மின் நகருடன் இணைக்கும் 46 விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அமெரிக்க கப்பல் மீது, ஹூதிகள் தாக்குதல் – செங்கடல் அமெரிக்கர்களுக்கு கல்லறையாக மாறும், அவர்கள் அவமானத்துடன் அந்த பகுதியை விட்டு வெளியேறுவார்கள் என எச்சரிக்கை..!

wpengine

புளோரிடாவை தாக்கிய இர்மா புயல் சுமார் 6 மில்லியன் மக்கள் பாதிப்பு..

wpengine

தொடரும் பிரான்ஸின் பதற்ற நிலை

wpengine