உள்நாட்டு செய்திகள்

விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட்-19 ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(26) ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட் ஒழிப்பு செயலணி ஒன்றுகூடியது.

சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் செயற்பாடுகள் சர்வதேச மற்றும் உள்நாட்டு சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இன்று(26) வரை கொவிட்-19 தொற்றுடைய எவரும் சமூகத்திலிருந்து இனம் காணப்படாமை நாடு அடைந்த வெற்றியாகும் என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

Related posts

கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு

wpengine

இன்றும் கன மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் எதிர்வு கூறல்

wpengine

பிரதமர் இன்று(28) கிளிநொச்சிக்கு விஜயம்…

wpengine