Top Story 3உள்நாட்டு செய்திகள்

விமான நிலையத்தில் தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடமிருந்து ​​4 தங்க நெக்லஸ்கள், 1 பென்டன், 02 வளையல்கள், 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு.. – பொது மக்கள் அவதானம்…

wpengine

அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்காக 79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு..

wpengine

மேல் மாகாணத்துக்கு மேலும் 494 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்…

wpengine