உள்நாட்டு செய்திகள்

விமான சேவையின் போக்குவரத்து தாமதம் குறித்து அறிக்கை…



ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவையினால் இன்று(27) முற்பகல் குறித்த அறிக்கை வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவா விதாரண தெரிவித்துள்ளார்.

இரண்டு விமானங்களில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே ஸ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறித்த விமான சேவை அறிவித்துள்ளது.

இதன்காரணமாக விமானப் பயணத்துக்காக பதிவு செய்துள்ளவர்கள், முன்கூட்டியே தங்களைத் தொடர்பு கொண்டு சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஸ்ரீ லங்கன் விமான சேவை அறிவுறுத்தியுள்ளது

019 7331979 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான சேவையை வழமைக்கு கொண்டு வருவதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்கள் 24 மணி நேர சேவையை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமானச்சேவை குறிப்பிட்டுள்ளது

Related posts

நாடு திரும்பினார்

wpengine

வெள்ளம் காரணமாக புகையிரத போக்குவரத்தும் பாதிப்பு..

wpengine

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி – ஜனாதிபதி…

wpengine