உலக செய்திகள்

விமான இருக்கையொன்றின் விலை ரூ. 20 லட்சம்



மும்பையிலிருந்து ‘டல்லாஸ்’ செல்லும் லண்டன் “லுப்தான்சா” விமானத்தின் பிசினஸ் கிளாசில் பயணித்துக் கொண்டிருந்தார் விவேக் தல்வார்.

நீண்ட பயணம் என்பதால் ஹாயாக படுத்து தூங்க நினைத்தவர் சீட்டை கீழிறக்க முடியாமல் தவித்துள்ளார். தரையில் படுப்பது போன்ற உணர்வைத்தரும் வகையில் முழுமையாகக் கீழிறங்க வேண்டிய இருக்கை, பாதி மட்டுமே கீழிறங்கியது.

இதனால் சரிவர ஒய்வெடுக்க முடியாமல் அவதிப்பட்ட விவேக், அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அவரது பயணச்சீட்டுத் தொகையான 50 ஆயிரம் ரூபாய்(780 டாலர்), வழக்கிற்காக அவர் செலவு செய்த 10 ஆயிரம் ரூபாய்(156 டாலர்), என்று ஒட்டு மொத்தமாக சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு(31 ஆயிரத்து 248 டாலர்) லுப்தான்சா விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன்

wpengine

உலக நாடுகளுக்கு சீன ஜனாதிபதி அழைப்பு

wpengine

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்..

wpengine