உலக செய்திகள்

விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து…



ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

அங்கு உள்ள மலையில் ஏறுவதற்காக 4 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர்.

இதற்கிடையே பயிற்சி விமானிகள் 3 சிறிய ரக விமானத்தில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியா உட்பட 05 நாடுகளுக்கு சீனா இறக்குமதி வரியினை நீக்கியது..

wpengine

மன்மோகன் சிங் மறைவு – முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

Azeem Kilabdeen

உக்ரைனில் சாலையோர விபத்து 5 பேர் உயிரிழப்பு…

wpengine