உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விமானத்தில் கைதான தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 05 வரை விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கோட்டா கோ ஹோம் போராட்டக்காரர்களில் முக்கிய ஒருவராக கருதப்படும் தானிஸ் அலிக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (26) விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தானிஸ் அலி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பொலிஸார் விடுத்த வேண்டுகோளை கவனத்தில் எடுத்த நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து அதன் ஒளிபரப்புக்கு இடைஞ்சல் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தானிஸ் அலி, நேற்றையதினம் (26) கட்டுநாயக்க விமான நிலையத்தில் துபாய் செல்ல முற்பட்ட வேளையில் விமானமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

இந்த அரசிடம் உரிய பொருளாதார திட்டங்கள் இல்லை

wpengine

பணத்திற்காக ஆடுகளத்தை மாற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணை – ICC…

wpengine

ரயன் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine