உள்நாட்டு செய்திகள்

விமானங்களது தாமதத்தினால் கட்டுநாயக்கவில் சற்றுப் பதற்ற நிலை..



கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு உட்பட்ட விமானங்களில் சில நேற்று(25) இரவு மற்றும் இன்று(26) காலை குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்படாமையின் காரணமாக விமானப் பயணிகள் சிலர் சுமார் 08 மணி நேரம் காத்திருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானங்களில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த தாமதம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டதோடு, பயணிகள் மற்றும் அதிகாரிகள் இடையே பதற்ற நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

UL 119, UL 121 சென்னை , UL 109 மாலே, UL 165 ,161, UL 219 டோஹா, UL 183 கராச்சி, UL 866 செங்கோய், UL 127 சென்னை ஆகிய விமானங்களிலேயே தாமதம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

#rishma

Related posts

இன்றும் 5 கொரோனா மரணங்கள்

wpengine

இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்

wpengine

2017ம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு…

wpengine