உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமல் வீரவன்ஸவின் மனைவியின் கையெழுத்தை கோருகிறது நீதிமன்றம்



பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் மனைவியான சஷி வீரவன்ஸவின் கையெழுத்து மாதிரியை பெற்றுத் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ் இன்று பிறப்பித்துள்ளார்.

போலி ஆவணங்கள் தொடர்பான அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு இந்த கையெழுத்து மாதிரியை சமர்ப்பிப்பதற்காகவே கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதாவது போலி ஆவணங்களை தயார் செய்து வெளிநாட்டிற்குச் செல்வதற்கான கடவுச்சீட்டைப் பெற்றமை தொடர்பில் விமல் வீரவன்ஸவின் மனைவிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை இந்த வழக்கு மீதான மீள்விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி இடம்பெறும் என நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

மரண தண்டனையினை நிறைவேற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை

wpengine

முன்னாள் அமைச்சர் சரத்திற்கு எதிராக சட்டமா அதிபரால் 02 வழக்குகள் தாக்கல்…

wpengine

பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை…

wpengine