உள்நாட்டு செய்திகள்

விபத்தில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பலி..



வீதி விபத்தில் படுகாயமடைந்திருந்த நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.ரீ. ஜப்பார் அலி (வயது 57) சிகிச்சை பயனின்றி இன்று(12) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(11) திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் சிற்றூர்ந்து மற்றும் பேரூந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

உமா ஓயா திட்டத்திற்கு எதிராக பண்டாரவளையில் ஹர்த்தால்…

wpengine

கடுவலை – பியகம வீதிக்கு பூட்டு…

wpengine

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine