உள்நாட்டு செய்திகள்

விடுதலைப் புலிகள் மீண்டும் தலை தூக்கலாம் – பிரபல சோதிடர் ஆரூடம்



பயங்கரவாதத்துடன் போராடக்கூடிய, சர்வதேசத்திற்கு அஞ்சாத் தலைவரை நியமிக்கவில்லை எனின் எதிர்வரும் சில வருடங்களினுள் தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் தலை தூக்க வாய்ப்புகள் அதிகம் உண்டென பிரபல சோதிடர் மஞ்சுல பிரீஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி சேவை நிகழ்ச்சி நிரல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளிடமிருந்து இந்நாட்டை காப்பாற்றுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அன்று மேற்கொண்ட தீர்மானம் மிக பயங்கரமானதென சுட்டிக்காட்டிய அவர், இந்நாட்டு மக்கள் குறித்த தீர்மானத்திற்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் யுத்தத்தை நிறைவு செய்தமையினால் சர்வதேச சமூகங்கள் எங்களுடன் கோபத்துடனே செயற்படுவதாகவும், இத்தேர்தலின் மூலம் அவர்களுடன் போராடக்கூடிய தலைவரை நியமிக்கவில்லை என்றால் நாட்டிற்கு ஏற்படவுள்ள ஆபத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும், கருத்துத் தெரிவித்த அவர், குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மகத்தான வெற்றி பெற வேண்டும் எனவும், எதிர்வரும் சில வருடங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என தான் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் சோதிடர் அக்குறித்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

(riz)

Related posts

கலப்பற்ற ஐ.தே.க. ரணில் விக்ரமசிங்கவுக்கு வேட்புரிமை வழங்குமா – முஸம்மில்

wpengine

அரசியல் கைதிகளின் தொடர்பான மீளாய்வு மேன்முறையீட்டு மனு நாளை…

wpengine

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர்  கைது

wpengine