கேளிக்கை

விஞ்ஞானியாக மாறும் சிவா…



தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்காக புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் ஊர் சுற்றும் வாலிபராக காமெடி கலந்த வேடத்தில் நடித்து வந்தார். அது போன்ற வேடம்தான் தனக்கு கை கொடுக்கும் என்று நம்பினார். ‘வேலைக்காரன்’ படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார்.

இப்போது, பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். முதல் படத்தில் ‘டைம் மிஷின்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்து விஞ்ஞானி தொடர்பான கதையை இயக்குகிறார்.

வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதை. எனவே, இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் விஞ்ஞானி ‘கெட்-அப்’-க்கு மாறுகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக கூறப்படுகிறது.

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

கோஹ்லியின் காதலிக்கு பாலியல் தொல்லை…

wpengine

அனிருத்தின் ‘தர்பார்’ கிழிந்தது [VIDEO]

wpengine

அப்ரிடி மூலம் கர்ப்பமாயுள்ளேன் – மொடல் அர்ஷி கான் பரபரப்புத் தகவல் (VIDEO)

wpengine