கேளிக்கை

விஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக இருந்தவர் திடீர் மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – பிரபல நடிகர்கள் பலருக்கு பாதுகாவலராக இருந்த மாரநல்லூர் தாஸ் மஞ்சள் காமாலையால் உயிரிழந்துள்ளார்.

நடிகர்கள் விஜய், சூர்யா, மம்மூட்டி, பவன் கல்யாண் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுக்கு பாதுகாவலராக இருந்தவர் மாரநல்லூர் தாஸ். தாஸ் ஏட்டன் என்று அழைக்கப்பட்ட அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 47. தாஸ் ஏட்டனின் மரண செய்தி குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாஸின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ள பிரபலங்கள் அவரின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Related posts

பத்திரிகையாளரை மணக்கிறார் பிரபல நடிகை…

wpengine

காமெடியில் பிரபலமான ஒருவரை அடுத்த ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் தனுஷ்…

wpengine

Dragon வடிவில் முடி வெட்டிய பிரபல நடிகை – 3 மாதம் பயிற்சி…

wpengine