உள்நாட்டு செய்திகள்

விஜயகலா ஜனாதிபதி ஆணைக்குழுவில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரன் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நகை கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று குளத்தில் குதித்திருந்தார்.

இதன்போது குறித்த நபர் உயிரிழந்ததுடன் அது தொடர்பில் யாழ் நீதிமன்றல் இடம்பெற்ற வழக்கில் அது இயற்கை மரணம் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது குறித்த சம்பவம் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரனினால் அது கொலை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் போலி சாட்சிகளின் ஊடாக குற்றம் சுமத்தப்பட்டதன் ஊடாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி மயுரன் ஞானலிங்கம் என்பவரின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வரவு செலவுத் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் – மஹிந்த..!

wpengine

வெள்ளிக்கிழமை வரை ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

wpengine

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்: தென் இலங்கை ஊடகர்களும் பங்கேற்பு

News Editor