உள்நாட்டு செய்திகள்

விஜயகலாவுக்கு ஆணைக்குழு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனையும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குமரன் சர்வானந்தாவையும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இருவரையும் எதிர்வரும் 17ம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுன்னகம் காவல்துறையில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஞானலிங்கம் மயூரன் ‘புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை’ தொடர்பில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த இருவரையும் வரவழைக்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

Related posts

27ம் திகதி முதல் 06 மணி நேர மின்வெட்டு அமுலுக்கு…

wpengine

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து TNA கடும் எதிர்ப்பு

wpengine

LTTE முன்னாள் தலைவி தமிழினியின் புத்தக வருமானம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு..

wpengine