உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசேட மேல்நீதிமன்றத்தின் முதலாவது விசாரணை வழக்கிற்கு அழைப்பாணை…


பாரியளவிலான நிதி மற்றும் ஊழல் தொடர்பில் விசாரிக்கும் மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றத்தின் முதலாவது விசாரணை வழக்கிற்கு எதிர்வரும் ஆகஸ்ட் 24ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளாது.

அன்றைய தினமே நீதிமன்றில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசில் 04 பில்லியன் ரூபா அரச நிதியினை முறைகேடாக பயன்படுத்தியமைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக குழுவின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக குறித்த முதல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மூவரடங்கிய நீதியரசர் குழாமில் சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன் மற்றும் ஷம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

பொல்கஹவெல, பனலிய ரயில் விபத்து குறித்து ஆராய குழு…

wpengine

வெலிகமயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு…

wpengine

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய உயர் பதவிகள் இருந்தவர்கள் இராஜினாமா..!

wpengine