உள்நாட்டு செய்திகள்

விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் 8 மாவட்டங்களில்…



பருவப் பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளமை மற்றும் அவ்வப்போது ஏற்படும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்தியநிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றும(12) நாளையும்(13) விசேட நுளம்பு ஒழிப்பு வே​லைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களில், தெரிவுசெய்யப்பட்ட 54 வலயங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியும் நடனமாடும் பிரபலங்களும்

wpengine

தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பம்

wpengine

மக்களுக்கு சுமையற்ற வரவு செலவுத் திட்டம் – கரு

wpengine