உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று(06)…



(FASTNEWS|COLOMBO) எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று(06) பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும், நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் நேரத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் புதிய பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் கட்சி தலைவர்களுக்கு தௌிவுப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பொது மக்கள் பார்வை கூடம் நாளை முதல் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்

wpengine

டொனால் டிரம்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து.

wpengine

அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம்  இன்று ஆரம்பம்………………

wpengine