விளையாட்டு

விசாரணைகளுக்கு உபுல் தரங்கவுக்கும் அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கடந்த 2011ம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சின் சிறப்பு விசாரணை பிரிவு உபுல் தரங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, இன்று(01) காலை 9 மணிக்கு விசாரணை பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ம் திகதி விளையாட்டு அமைச்சின் சிறப்பு விசாரணை பிரிவு மஹிந்தானந்த அலுளுத்கமகேயிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில், அப்போது தெரிவுக்குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா விளையாட்டு அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவில் நேற்று(30) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

2011ம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருந்ததாக அப்போதைய விளையாட்டு துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே சர்ச்சைக்குரிய கருத்தினை அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு வருடங்களின் பின்னர் மீளவும் அணியில் ப்ராவோ…

wpengine

கிரிக்கெட் இனது எதிர்காலம் வாஸ் இடம் கையளிப்பு – பந்துவீச்சாளர்கள் சிலர் எதிர்ப்பு..

wpengine

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

wpengine