Top Story 1உள்நாட்டு செய்திகள்

விக்னேஸ்வரன், அத்தாவுல்லாஹ் ரணிலுக்கு வாக்களிக்கவுள்ளனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக அவர் ஜனாதிபதி தெரிவின்போது நடுநிலை வகிக்கப்போவதாகவும், தீர்மானம் மாறக்கூடும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இதனடிப்படையிலேயே இன்று அவர் ரணிலுக்கு வாக்களிப்போவதாக அறிவித்துள்ளார்.

அதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வாக்களிப்பை புறக்கணிப்போவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

Related posts

ஹிட்லர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ரணில் தன்னை ஹிட்லர் எனக் கூறுவதைப் பார்த்து மீண்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பார்..!

wpengine

பசில் தான் ரணில், ரணில் தான் பசில், நாங்கள் அவருக்கு ஆதரவு இல்லை!

wpengine

பயங்கரவாதம் உலகளாவிய ஒரு சவால்

wpengine