உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விக்கியினை கதிரையிலிருந்து தூக்கி எறிந்திருப்பேன் – மேர்வின் சூளுரை..


தான் தற்போதைய அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை நாற்காலியில் இருந்து தூக்கிய எறிந்திருப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரலாற்றை அறியாதவர்கள் எவரும் கனவான் அல்ல என கூறிய அவர், அனைத்து இனங்களும் ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற போதிலும் தமது அடையாளத்தை எவரிடமும் காட்டிக்கொடுக்க முடியாது என்றும் மேர்வின் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வரலாறு இராவணன் காலத்தில் இருந்து தொடங்குகிறது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால், யாழ்ப்பாணத்திற்கு சென்று அந்த மனிதனை நாற்காலியில் இருந்து தூக்கி எறிந்திருப்பேன்.

சிங்கள மக்கள் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் குறித்து ஆத்திரமடையாது இருக்க வேண்டும்.

முட்டாள்களின் கதைகளை கேட்டு ஆத்திரமடைய வேண்டாம் என சிங்கள பெளத்த மக்களிடம் நான் கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன் என மேர்வின் சில்வா மேலும் கூறியுள்ளார்.

Related posts

டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகமவை கைது செய்யுமாறு பிடியாணை

wpengine

சந்திரிக்காவின் லண்டன் பயணமும் அரசியல் திருவிளையாடலும்

wpengine

இலங்கை – பாகிஸ்தான் போட்டி அட்டவணை வெளியானது! (அட்டவணை இணைப்பு)

wpengine