வாழ்க்கை

வாய்ப்புண் உண்டாகி அவதிப்பட்டீங்களா? உடனடி நிவாரணம் இதோ..



சமீபத்தில் உங்கள் வாயின் கொப்புளங்கள் உண்டாகி அவதிப்பட்டீங்களா? அப்படி உண்டாவதைத்தான் ‘வாய்ப்புண்’ (MOUTH ULCER) என நாம் அழைக்கிறோம்.

காரணம்? உங்கள் உடம்பு சம நிலையற்று மலச்சிக்கல், அசிடிட்டி, சத்து பற்றாக்குறை, அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் வர வாய்ப்பாகவும் இருக்கிறது. வாய்ப்புண் தோன்ற மற்ற சில முக்கிய காரணங்களாக உடல் உஷ்ணமும், அதிகம் புகைப்பிடிக்கும் பழக்கமும், மனஅழுத்தமும், உங்கள் பற்களை பாதுகாக்க தவறுவனவும் இருக்கிறது.

இந்த புண்ணால் ஏற்படும் வலிக்கு எத்தகைய மருந்துகளும் வேண்டியதில்லை என்கின்றனர். இந்த வலி உங்களுக்கு இரண்டு நாட்களும் தொடரும்…சில சமயங்களில் ஒரு வாரம் கூட இருக்க வாய்ப்பிருக்கிறதாம்.

சமையல் சோடா:

இது பேக்டீரியாவை அழிக்க உதவுவதுடன், புண்ணையும் போக்குகிறது. இது எரிச்சலை குறைக்க செய்யவும் உதவுகிறது. மேலும் இது கிருமிகளையும், பாக்டீரியக்களையும் அழிக்கிறது.

1 டீ ஸ்பூன் சமையல் சோடாவை ½ கப் தண்ணீருடன் சேர்த்து, நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதனை கொண்டு உங்கள் வாயினை கழுவ வேண்டும். ஆம், கழுவும் பொழுது…தண்ணீரினை உங்கள் வாயின் நாளாப்புறமும் சுழற்றி, கொண்டுசென்று அதன் பின் துப்புவது மிகவும் முக்கியம். இதேபோல் ஒரு நாளைக்கு இரணடு முறை செய்து வர உங்கள் பிரச்சினைகள் நீங்கும்.

தேன்:

உங்கள் புண் மீது 1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனோடு கலந்து…பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் பூச வேண்டும். உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டுமென்றால்… மஞ்சளை தேனுடன் கலந்து தேய்க்க வேண்டும்.

 

(rizmira)

Related posts

அன்னாசிப் பழச்சாறை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

wpengine

நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவரா? அப்ப இத படிங்க

wpengine

சருமத்தின் கருமையை போக்கும் மாம்பழ பேஸ் பேக்

wpengine