உள்நாட்டு செய்திகள்

வாத்துவ பிரதேச களியாட்ட நிகழ்வு – நான்காவது நபரும் உயிரிழப்பு…


கடந்த 4ம் திகதி களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்திருந்த நான்காவது நபரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகயீனமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பொதுஹெர பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபரே இன்று(05) இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம்(04) இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீனமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் மூவர் நேற்று(05) உயிரிழந்திருந்தனர்.

உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

R.Rishma

Related posts

மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிப்பு…

wpengine

யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine

அதிகாரத்தினை கைப்பற்றிய மன்றங்களில் பதவிகளை வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 04 அடிப்படைகள் குறித்து அவதானம்…

wpengine