உள்நாட்டு செய்திகள்

வாத்துவ களியாட்ட சம்பவம் தொடர்பில் 02 பேருக்கு விளக்கமறியல்…


வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீனமடைந்திருந்த 04 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவு பிறப்பித்துள்ளது.

களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பிரச்சார அதிகாரி ஆகிய இருவரும் நேற்று(09) கைது செய்யப்பட்டனர்.

வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 146 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

அனைத்து மாகாண ஆளுனர்களையும் பதவி விலகுமாறு கோரிக்கை

wpengine

முன்னாள் அமைச்சர் ரோஹித்த கைது செய்யப்படலாம்?

wpengine