வணிகம்

வாசனைத் திரவியங்களை நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக மாற்ற நடவடிக்கை…



(FASTEWS-COLOMBO) 2025ஆம் ஆண்டுக்கு முன்னர், நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை முதலிடத்திற்கு கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

பிரதான 04 வாசனைத் திரவியங்களுக்கான முத்திரையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கறுவா, மிளகு, கராம்பு, சாதிக்காய் ஆகிய நான்கு வாசனைத் திரவியங்களையும் பிரதிபலிக்கும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டது.

உள்நாட்டு வாசனைத் திரவியங்களின் பெறுமதியை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதியாளர்களுக்கும் துறைசார் உற்பத்தியாளர்களுக்கும் உயர்ந்தபட்ச நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டார்.

Related posts

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு…

wpengine

மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து…

wpengine

நாடளாவிய ரீதியில் பொதியிடும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டம்

wpengine