உள்நாட்டு செய்திகள்

வாக்காளர் இடாப்பு குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள்…


2018 ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்காமை, பெயர் பிழையாக பதியப்பட்டுள்ளமை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டத் தேர்தல் காரியாலயத்தில் குறித்த விசாரணைகள் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த மாதம் 25 ஆம் திகதி 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரசன்ன ரணவீர,உள்ளிட்ட 31 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி..

wpengine

மஹிந்தவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்….

wpengine

கொரோனா : அன்டிஜென் பரிசோதனை அறிமுகம்

wpengine