உள்நாட்டு செய்திகள்

வாக்களிப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்த வாக்காளர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாவலபிட்டி மத்திய மகாவித்தியாலயத்திற்கு வாக்களிக்க சென்ற நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது ​செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வாக்களிப்பதை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தமையை தேர்தல் கடமையில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர் இனங்கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் நாவலபிட்டி இம்புலுபிட்டி பகுதியை சேர்ந்த 31வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பொதுப்போக்குவரத்துகளில் மட்டு

wpengine

பத்தரமுல்லை ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து நீர்கொழும்பில் ஆசிரியர்கள் போராட்டம்..!

wpengine

அரச சொத்துக்கள் குறித்து இதுவரை முறையான தணிக்கை இல்லை

Azeem Kilabdeen