உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 11 பேர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹவெல சந்தியில் இன்று(28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ஜீப் ஒன்றும் எதிர் திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

காயமடைந்த நபர்கள் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் பதவியினையும் இராஜினாமா செய்கிறார் மாவை சேனாதிராஜா…

wpengine

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

wpengine

பாடசாலை வேன்களது கட்டணமும் குறைவு…

wpengine