உள்நாட்டு செய்திகள்

வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதில் சர்ச்சை நிலை..


வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு உரிய மருத்துவ சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள், நாடு முழுவதும் குழப்பகரமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து வைத்திய பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைளை மீறுகின்றவர்களுக்கு எதிரான அபராதத் தொகை 25,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகளுக்கான அனுமதி பத்திரங்களைப் பெற முயற்சிப்பவர்களே இவ்வாறு நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ரிஷாட் இன்று(30) தனது கடமைகளை பொறுப்பேற்றார்

wpengine

கேரள கஞ்சா கடத்திய நால்வர் கைது

wpengine

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

wpengine